பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் டிஜிபி -யாக உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் படுகாயம் அடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வீட்டு வசதி வாரிய டிஜிபி அந்தஸ்தில் இருப்பவர் 59 வயதான ஆர்.பி.ஷர்மா. இவர் தனது வீட்டில், தனக்கான கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தாராம்.

அப்போது, விசையின் மீது கைப்பட்டு, துப்பாக்கி வெடித்து, இவரின் மார்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வரும் டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற இருந்த நிலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த அவர், ஆபத்தான கட்டத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. தான் தவறுதலாக சுட்டுக்கொண்டதாக பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்டிடம், டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.