பெங்களூரு: கர்நாடகாவில் இன்று புதிதாக 2,627 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந் நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 2,627 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,843 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பு உயர்ந்திருப்பது போல, பலி எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகி உள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பு, 684 ஆக உயந்துள்ளது.
693 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22,746 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

[youtube-feed feed=1]