டில்லி:

ர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஜேடிஎஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களைவில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்பட கூட்டணி கட்சிகள் குரல் எழுப்பின.

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வரும் பாஜகவின் நடவடிக்கையை கண்டித்து,  மக்களவை யில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு  செய்தது. அதுபோல மாநிலங்களவையும் பிற்பகல் 3 மணி வரை முடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று கூட்டணி ஆட்சிக்கு எதிராக 14 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியினரின் கட்டுப்பாட்டில் மும்பையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களின் கடிதங்களை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்ட நிலையில், அவர்மீது உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைககளிலும் இன்று எதிரொலித்தது. இந்த விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பிய காங்கிரஸ் கட்சி உறுப்பி னர்கள், மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ர்நாடக அரசை கலைக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி, முழக்கமிட்டனர்.

ஆனால், காங்கிரஸ் எம்பிக்களின் கோரிக்கையை, மத்திய அரசு செவி மடுக்காமல் இருந்து வந்தது.   இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

அதுபோல மாநிலங்களவையும் கர்நாடக பிரச்சினை காரணமாக அமளிதுமளி பட்டது. இதையடுத்து, மதியம் 3 மணி வரை மாநிலங்களவை  ஒத்திவைக்கப்பட்டது.