பெங்களூரு

கர்நாடக அமைச்சர் ஜமீர் வீட்டு ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருந்தால் பதவி வில்க தயார் என அறிவித்துள்ளார்/

கர்நாடாகவில் அரசின் வீட்டு வசதித்​துறை சார்​பில் வீடற்ற ஏழை மக்​களுக்கு வீடு, வீட்டு மனை, வீடு கட்​டு​வதற்கு மானியம் ஆகியவை வழங்​கப்​படுவதில் முறை​கேடு நடை​பெறு​வ​தாக புகார் எழுந்​தது.

ஆலந்த் தொகு​தி​யின் காங்கிரஸ் எம்​எல்ஏ பி.ஆர்​.​பாட்​டீல் பேசிய ஆடியோவில்,

‘ராஜீவ் காந்தி வீட்​டு​ வசதி ஆணை​யத்​தில் ஊழல் தலை​விரித்​தாடு​கிறது. அதி​காரி​கள் அத்​தனை பேரும் பணம் வாங்கி கொண்டே வேலை பார்க்​கிறார்​கள். ஏழை மக்​களிடம் லட்​சக்​கணக்​கில் பணம் வாங்கிக் கொண்டே வீட்டு மனையை ஒதுக்​கு​கிறார்​கள். எனது தொகு​தி​யில் 900 பேருக்கு வீடு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது​”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு வசதி துறை அமைச்​சர் ஜமீர் அகமது கான் செய்​தியாளர்களிடம்,

‘‘எனது துறை​யில் ஊழல் நடப்​ப​தாக கூறும் காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் அதற்​கான ஆதா​ரத்தை வெளி​யிட வேண்​டும். யார் யாரிடம் எவ்​வளவு லஞ்​சம் வாங்​கி​னார்​கள் என கூற வேண்​டும். கிராம நிர்​வாக அதி​காரி லஞ்​சம் வாங்​கி​னா​ரா? யாரேனும் அதி​காரி​கள் வாங்​கி​னார்​களா? அமைச்​சர் வாங்கினா​ரா? என தெளி​வாக கூற வேண்​டும்.

இந்த விவ​காரத்​தில் எத்​தகைய விசா​ரணைக்​கும் நான் தயா​ராக இருக்​கிறேன். நான் லஞ்​சம் வாங்​கிய​தாக யாரேனும் நிரூபித்​தால் என்​னுடைய அமைச்​சர் பத​வியை ராஜி​னாமா செய்ய தயா​ராக இருக்​கிறேன்’’

என்றார்.