பெங்களூரு: கர்நாடகாவில் கால்நடைத் துறை அமைச்சர் பிரபு சவுகானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தொற்றானது ஜூன் முதல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சில நாட்களாக கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்துக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில கால்நடைத் துறை அமைச்சர் பிரபு சவுகானுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த காலங்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.