பெங்களூரு: பாலியல் சர்ச்சையில் சிக்கிய கா்நாடக நீா்பாசனத் துறை அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி திடீரென தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வட கா்நாடகத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் பெங்களூரு, ஆா்.டி.நகரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். அவா், அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளியிடம் கா்நாடக மின் பகிர்மான கழகத்தில் வேலை வாங்கித் தருமாறு கேட்க, அமைச்சரும் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
அதைத் தொடா்ந்து அந்தப் பெண்ணிடம் அமைச்சா் பலமுறை பாலியல் தொடா்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதால் வேதனையடைந்த அப் பெண் பாலியல் தொடா்பை கேமராவில் பதிவு செய்துள்ளார். பாலியல் தொடா்பு பதிவு செய்யப்பட்டதை அறிந்த அமைச்சா் தரப்பு, அப் பெண்ணைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.
இந்த விவரத்தை மனித உரிமை ஆா்வலா் தினேஷ் தினேஷ் கல்லஹள்ளி பெங்களூரு மாநகரக் காவல் ஆணையரிடம் புகாராக அளித்தார். புகாரை தொடா்ந்து தொலைக்காட்சிகளில் அமைச்சரின் பாலியல் தொடா்பான செய்திகள் வெளியாகின. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து அமைச்சா் ரமேஷ் ஜார்கிஹொளி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.