பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கர்நாடகா மாநிலத்தில் உள்ள 5,762 பஞ்சாயத்திற்கான உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெறும்.
முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 22ம் தேதி நடக்கும். 2ம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ம் தேதியும் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 30ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.