பெங்களூரு: இஐஏ 2020 எனப்படும் சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான இறுதி வரைவை வெளியிடுவதற்கு மத்திய அரசிற்கு தடைவிதித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.
இறுதி வரைவு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அந்த வரைவு, கன்னடம் உள்பட பல மாநில மொழிகளில் வெளியிடப்பட்டு, அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்கள் கேடகப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, மத்திய மோடி அரசுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
யுனைடெட் கன்சர்வேஷன் மூவ்மென்ட் என்ற அமைப்பு தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த வரைவு, பல மாநில மொழிகளில் வெளியிடப்படாமலும், மக்களின் விரிவான கருத்துக்கள் கேட்கப்படாமலும், குறுகிய நாட்கள் மட்டுமே பெயரளவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு, இறுதிவரைவை வெளியிடும் திட்டத்தில் இருந்தது மோடி அரசு. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில்தான் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.