கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் திடீர் மரணத்தை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், “மாரடைப்பால் இறப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயமாக்கப்படும்” என்றார்.

45 வயதுக்குட்பட்ட நபர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிய, கர்நாடக அரசு அத்தகைய இறப்புகளை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

மேலும், மாரடைப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்த அவர் இதுகுறித்த பாடத்தை பாடப்புத்தகத்தில் சேர்க்க கல்வித் துறைக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

‘கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.’ ஆனால், அது கோவிட் தடுப்பூசியிலிருந்து வந்ததல்ல. கோவிட் தடுப்பூசியால் மக்கள் பயனடைந்துள்ளனர். கோவிட் வந்தபோது எடுக்கப்பட்ட பிற மருந்துகளின் விளைவு அது.

உடல் பருமன், நீரிழிவு மற்றும் பிற பிரச்சனைகளும் மாரடைப்புக்கு பங்களிக்கின்றன என்று அவர் கூறினார்.