பெங்களூரு
கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.
வரும் 12 ஆம் தேதி கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை ஒட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வரும் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு வேட்பாளர்கள் நாளை மாலை 5 மணி வரை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி உள்ளது. அதன்பிறகு எந்த வகையிலும் வாக்கு சேகரிப்பு நடத்தக் கூடாது.