கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் சென்ற கான்வாய் தலைகுப்புற கவிழ்ந்ததில் 4 பேர் காயமடைந்தார்.
மைசூரில் நடைபெற்ற பயிற்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பெங்களூரு திரும்பிய போது ஓசூர் கேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

இதில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த கான்வாய் வாகனத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழைத்ததால் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பெங்களூருவைச் சேர்ந்த தினேஷ், மகேஷ், ஜெயலிங்கு மற்றும் கார்த்திக் ஆகிய 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கான்வாய் வாகனம் பகுதியளவு சேதமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.