Kudos to Team #Dhaksha, mentored by filmstar #AjithKumar, for developing a way to sanitize large areas against COVID-19 via disinfectant drones.
Time and again, technology has proven to be critical in the fight against #COVID-19!
@sugaradhana pic.twitter.com/3hwhciDZdt
— Dr. C.N. Ashwath Narayan (ಮೋದಿ ಅವರ ಪರಿವಾರ) (@drashwathcn) June 27, 2020
கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித்.
அதன்மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். இது பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது.
இந்நிலையில் இந்த விமானம் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.
இதனிடையே இந்தப் பணியை கர்நாடகாவிலும் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண்
“கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, பெரிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க, கிருமிநாசினி ட்ரான் வழியாக ஒரு வழியை உருவாக்கியதற்கு, திரை நட்சத்திரம் அஜித்குமாரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட தக்ஷா அணியினருக்குப் பாராட்டுகள். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது” என பதிவிட்டுள்ளார் .