சோலாப்பூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே காலமானார். அவருக்கு வயது 65.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மாருதி மன்படே (வயது 65) தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். 2 வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாருதி, சோலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். கர்நாடக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக போராடியதால் அவர் பரவலாக அறியப்பட்டார்.
மாருதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண், தாழ்த்தப்பட்டவர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குரலாக திகழ்ந்த மாருதி மறைந்தது அறிந்து வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel