சிங்கமளூர்: கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினரால் சபாநாயகர் இருக்கையில் இருந்து தள்ளப்பட்ட தர்மேகவுடா மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் தண்டவாளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்மகளூரு அருகே ரயில் முன் பாய்ந்து கர்நாடக மாநில துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மே கவுடா தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் சிக்மகளூரில் உள்ள கடூர் அருகே ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் எழுதிய தற்கொலை குறிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரை உடலை கைப்பற்றிய காவல்துறையினல் உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கர்நாடக மாநில சட்ட மேலவையில் துணை சபாநாயகராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தர்மே கவுடா இருந்து வந்தார். இவர் கட்சித் தலைவர் தேவகௌடாவுக்கு இவர் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. கடந்தசில நாட்களாக மதசார்பற்ற ஜனதாதளம் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15 – ம் தேதி அன்று கர்நாடக சட்ட மேலவையில் எடியூரப்பாக அரசால் பசுவதை தடுப்பு மசோதாவை நிறைவேற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த மசோவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர்நிறைவேற்ற மறுத்து எழுந்து சென்றுவிட்டார். அதனால், சபாநாயகர் இருக்கையில் துணை சபாநாயகர் தர்மே கௌடா அமர்ந்து, மசோதாவை நிறைவேற்ற முயன்றார். ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தர்மே கௌடாவை சபாநாயகர் இருக்கையிலிருந்து தள்ளி அப்புறப்படுத்தினர். மேலும், தர்மே கௌடா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவர முயற்சி நடைபெற்றது.
இதனால், கடுமையான மனஅழுத்ததிற்கு ஆளான தர்மே கவுடா, சில நாட்களாக தனிமையிலேயே சிந்தித்து வந்ததாகவும், யாருடனும் சரியனா முறையில் பேசி பழகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்று மாலை ஆறு மணியளவில் தனது வீட்டிலிருந்து டிரைவருடன் காரில் புறப்பட்டுள்ளார். ரயில் பாதை அருகே வண்டியை நிறுத்தச் சொன்னவர், டிரைவரிடம் ஜான் சதாப்தி ரயில் வரும் நேரம் குறித்துக் கேட்டு தெரிந்துகொண்டதாகவும், பின்னர், ‘நான் கொஞ்ச நேரம் தனியாக இருக்கவேண்டும்’ என்று கூறி டிரைவரை மட்டும் திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இரவு வெகு நேரம் ஆகியும் தர்மேகவுடா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர், அவரது போனுக்கு தொடர்புகொள்ள முயன்றபோது, அது அவரது ஸ்விட்ச் ஆஃப் ஆகி செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், உடனே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அவரை தேடிய போது, கடூர் அருகே மங்கனஹள்ளி ரயில் பாதையில் இரவு ரயில் தண்டாவளத்தில் தலை துண்டான நிலையில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தர்மே கௌடாவின் சடலத்துடன் ஒரு கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட அவரின் உடல் சிக்கமங்களூரு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபாநாயகர் இருக்கையில் இருந்து காங்கிரசார், தன்னை தள்ளிவிட்டதை மானப்பிரச்சினையாக கருதி, தர்மேகவுடா கடுமையான மன உளைச்சலில் விரக்தியுடன் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் தற்கொலை செய்துள்ள கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் எஸ்.எல். தர்மேகவுடா தற்கொலை செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு அமைதியான மற்றும் ஒழுக்கமான மனிதர். இது மாநிலத்தின் இழப்பு” என்று முன்னாள் பிரதமரும் ஜே.டி.எஸ் தலைவருமான எச்.டி.தேவேகவுடா கூறியுள்ளார்.