ஹூப்ளி,

னியார் தொலைகாட்சி செய்தியாளர்கள் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். அவரது உடலை போலீசார் குப்பை வண்டியில் தூக்சிச் சென்றனர். இது சக பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக வேலை செய்து வருபவர் மவுனேஷ். இவர் நேற்று விலை நிமித்தமாக ஹுப்ளி பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி காவல்துறையினல் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தில் இறந்த செய்தி யாளரின் உடலை குப்பை அள்ளிச்செல்லும் டிராக்டரில் தூக்கிப்போட்டு எடுத்துச் சென்றனர்.

இது விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மற்ற செய்தியாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

ஆனால், போலீசார்,  ஆம்புலன்ஸ் பற்றாகுறையாக இருப்பதால் வேறு வழியில்லை என்றும், அதன் காரணமாக குப்பை வண்டியில் தூக்கிச் செல்வதாகவும் கூறி உள்ளனர்.

மேலும், இறந்த மவுனேஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதிலும் காலதாமதம் செய்ததாகவும், அவரது குடும்பத்தினர் புகார் கூறி உள்ளனர்.

ஹுப்ளி போலீசாரின் அந்த செயல் கர்நாடக செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாக செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.