பெங்களூரு:
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சரவை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா வரும் 6-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலை முதல்வர் குமாரசாமி வெளியிட்டார்.
மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த 12 பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். நிதி, பொதுப்பணி, மின்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகள் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும், உள்துறை, பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி, சுகாதாரம், வருவாய் துறைகள் காங்கிரஸூக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாரியம் மற்றும் மாநகராட்சிகளை 3:2 என்ற கணக்கில் பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரசுக்கு 3ம், மஜத.வுக்கு 2 என்ற நிலைப்பாட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகள் சார்பிலும் செய்தி தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்படும். மாதந்தோறும் இரு கட்சிகளின் குழு கூடி ஆலோசனை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டணி எதிர்வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் உதவி நியூஸ் 9: நன்றி