பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வந்த என்.ஆர்.சந்தோஷ் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கர்நாடக மாநில பாஜக முதல்வர் எடியூரப்பா.. இவரது அரசியல் பிரிவு உதவியாளர் என்.ஆர்.சந்தோஷ். இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முதல்வர் எடியூரப்பாவுடன் நேரடி தொடர்பு உள்ள என்.ஆர்.சந்தோஷ், கட்சியினர் மட்டுமின்றி அதிகாரிகள் மட்டத்தில் பிரபரமானவர். இவர், நேற்று காலை எடியூரப்பாவுடன் சேர்ந்து நடைபயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் என்.ஆர்.சந்தோஷ் தனது வீட்டில் உள்ள தன்னுடைய அறையில் மயங்கி கிடந்தார். அதைப்பார்த்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, உடடினயாக அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமய்யா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், என்.ஆர்.சந்தோஷ் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முதல்வர் எடியூரப்பா நேற்று இரவு இதற்கிடையே நேற்று இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று என்.ஆர்.சந்தோசின் உடல்நிலை குறித்து விசாரித்தார். என்.ஆர்.சந்தோஷின் தற்கொலை முயற்சி சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.