பெங்களூரு

நாளை கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக காங்கிரஸ் ஆதரவுடன் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.   அமைச்சரவை இலாகா பங்கீடு குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.   இது பற்றி நாளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேச உள்ளனர்.

நாளை டில்லி சென்று கர்நாடக முதல்வர்  பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   இந்த தகவலை பெங்களூருவில் முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை காலை 11.30  மணிக்கு மோடியை சந்திக்கும் குமாரசாமி நான்காண்டு கால பாஜக ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு கர்நாடக அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி பேச உள்ளார்.  அத்துடன் கர்நாடக மின்நிலையங்களுக்கான நிலக்கரி தேவையை ஒட்டி மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் சந்திப்பு நிகழ்த்துகிறார்.