பெங்களூரு: கர்நாடகாவில் குறைகளை கூறும் விவசாயியை பாஜக எம்பி தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.

கர்நாடகாவின் ஹவேரி-கடக் தொகுதி எம்பியாக இருப்பவர் சிவக்குமார். பாஜகவை சேர்ந்த அவர் தமது தொகுதிக்கு ஆதரவாளர்களுடன் சென்றிருக்கிறார்.

அப்போது எம்பியை பார்த்த பொதுமக்கள் அவரிடம் குறைகளை தெரிவிக்க எத்தனித்தனர். அவர்களில் விவசாயி ஒருவர், தமது குறைகளை கூற அவரை அணுகிறார். பின்னர் தமது குறைகளை அவர் எம்பி சிவக்குமாரிடம் தெளிவாக விளக்கி கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் எம்பியோ அவரின் குறைகளை காதில் வாங்கியும், வாங்காதது போன்று நடந்து செல்கிறார். அப்போது விடாது அந்த விவசாயி குறைகளை நிவர்த்தி தருமாறு கேட்டபடியே வருகிறார். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக எம்பி சிவக்குமார் அந்த விவசாயியை அப்புறப்படுத்த முனைகின்றனர்.

எம்பி சிவக்குமாரும், விவசாயியை பலம் கொண்ட மட்டும் வேகமாக தள்ளுகிறார். அவரின் இந்த செய்கை அடங்கிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது.