எடியூரப்பாவுக்கு எதிராக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்..

கர்நாடகவில் காங்கிரசில் இருந்து விலகி வந்தவர்களுக்குக் கொடுக்கும் ,முக்கியத்துவம் தங்களுக்குத் தரப்படுவதில்லை என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.
’ தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும்’’ என அவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.
ஜுன் மாதம் கர்நாடகாவில் சில இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தலும், எம்.எல்.சி. தேர்தலும் நடக்க உள்ளது.
தேர்தல் முடிந்த பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அப்போது அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் எடியூரப்பா, சமாதானம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில்,அமைச்சர் பதவி கேட்டு பிடிவாதம் பிடிக்கும் 13 எம்.எ.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள பா.ஜ.க. மூத்த எம்.எல்.ஏ. உமேஷ் கட்டி இல்லத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த சில செய்தியாளர்கள், இந்த கூட்டத்தில் கலந்து எம்.எல்.ஏ.ஒருவரிடம் விசாரித்துள்ளார்.
அதற்கு அந்த எம்.எல்.ஏ. ‘ கூட்டம் நடந்து உண்மை. எடியூரப்பாவுக்கு எதிராக நாங்கள் திரண்டதாகக் கூறப்படுவதில் நிஜம் கிடையாது. இது சும்மா ஒரு ‘டின்னர் மீட்டிங்’’ என்று கூறி முடித்துக்கொண்டார்.
கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறிவரும் எடியூரப்பாவை, சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களின் ரகசிய கூட்டம், மிரளச்செய்துள்ளது.
-ஏழுமலை வெங்கடேசன்