பெங்களூரு
கர்நாடக பாஜக அரசு திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது.
கடந்த 18 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தை தலைநகராகக் கொண்டு மைசூரில் திப்பு சுல்தான் ஆட்சி செய்து வந்தார் அவர் பிறந்த நாளான நவம்பர் 10 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்ததது.
திப்பு சுல்தான் விழாவுக்கு பாஜக ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
கடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜக தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவ்தை ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அரசு கவிழ்ந்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இப்போது ஆட்சியை பிடித்துள்ள பாஜக திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை ரத்து செய்துள்ளது. கர்நாடக மக்களில் பலர் மத வேறுபாடு இன்றி திப்பு சுல்தானை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டவர் என்னும் கண்ணோட்டத்தில் பார்த்து வருவதால் அரசின் இந்த அறிவிப்பு கர்நாடக மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.