கேபிஎன் நடராஜன் தீ வைத்த , பாக்யஸ்ரீ
கேபிஎன் நடராஜன்                                                                                           – தீ வைத்த  பாக்யஸ்ரீ
பெங்களூர்:
ர்நாடகாவில் நடைபெற்ற  கலவரத்தின்போது பெங்களூரில் உள்ள  கே.பி.என் டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரிப்பதற்கு, துணையாக இருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை தலைவிரித்து ஆடியது. கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த வன்முறையில்  தொழில் நிறுவனங்கள், கடைகள்,  வாகனங்கள் சேதமானது. போராட்டத்தின் உச்சக்கட்டமாக  நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் லாரிகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட, டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை கலவரக்காரர்கள் பெட்ரோல், டீசல் ஊற்றி தீ வைத்தனர். இதில் 42 பஸ்கள் முற்றிலும் எரிந்து எலும்புகூடுகளாகின. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடடினயாக வரவில்லை. இதன் காரணமாக அனைத்து பஸ்களும் எரிந்து நாசமாயின.
1-bus
இந்த  தீ வைப்பு சம்பவம் மாலை 4 மணி முதல் 4.30க்குள் நடந்துள்ளது. அந்த நேரத்தில் பஸ்சுக்குள் இரவு பணிக்கு செல்ல வேண்டிய  22 டிரைவர்களும், 2 கிளீனர்களும்,  படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
பஸ்சில் பெட்ரோல் வாசம் வருவதை அறிந்த டிரைவர்கள் பஸ்சை  தீ வைத்து கொளுத்த முற்படுவதை அறிந்ததும், சக டிரைவர்கள் மற்றும் கிளினர்களை அழைத்துகொண்டு சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த பிரச்சினை பூதாகாரமாக உருவெடுத்தது. உச்ச நீதி மன்றமும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, கர்நாடக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
1-bus-a
கேபிஎன் பஸ் டிப்போவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  ஆய்வு செய்தனர். அதில், இளம் பெண் ஒருவர் பெட்ரோல், டீசலை சப்ளை செய்து பஸ்களை கொளுத்த உதவியது பதிவாகி இருந்தது.
இதை தொடர்ந்து  கேமராவில் பதிவான பெண்ணின்  உருவத்தை வைத்து  அந்த பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் அருகிலுள்ள யசோதா நகர் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ  என்ற 22 வயது இளம் பெண் என்பது தெரியவந்தது. இவர்தான் கலவரத்தின்போது பஸ் எரிப்பில் ஈடுபட்டது  தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் வடகர்நாடகா வின்யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும்,  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி பெங்களுர் வந்தது தெரியவந்துள்ளது. கூலி தொழிலாளியான இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
சம்வவம் நடைபெற்ற அன்று  சில வாலிபர்கள் கன்னட கொடியை பிடித்து வருவதை கண்டதும், அவர்களிடம் அருகே கேபிஎன் பஸ் நிறுவன டிப்போ உள்ளது அதை கொளுத்தலாம் என் தூண்டியதுடன், அவர்களுடன் சேர்ந்து பஸ்சை கொளுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கர்நாடகா மீதான அபிமானத்தால் இவ்வாறு செய்ததாக பாக்யஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், இளம்பெண்ணான இவரை யாராவது தூண்டி இருக்கலாம், அதன்பேரில் அவர் இந்தமுயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
1-bus-b
பாக்யஸ்ரீ மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த பஸ் எரிப்பு குறித்து கே.பி.என்உரிமையாளர் நடராஜன் கூறுகையில், கைது செய்யப்பட்ட பெண்தான், கலவரக்காரர்களை தூண்டிவிட்டு முன்னின்று தீவைப்பை நிகழ்த்தினார் என்று, சம்பவ இடத்தில் இருந்த எங்கள் டிராவல் ஸ்டிரைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார்.
பஸ்சை எரித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி விரைவில் முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளிக்க உள்ளதாகவும் நடராஜன் தெரிவித்துள்ளார்.