தார்வார்டு: கர்நாடகாவில் தார்வார்டு அருகே டிரக்கும், டெம்போவும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 11 பேர் பலியாகினர்.
ஹுப்ளி – தார்வார்டு பைபாஸ் சாலையில் தார்வார்டு நகருக்கு 8 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தில் டெம்போவில் வந்த 10 பெண்கள் மற்றும் அதன் ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாவாங்கேர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவாவில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க டெம்போவில் சென்றனர். அப்போது, எதிரே வந்த டிரக் மீது மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.