தனுஷ் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கர்ணன்’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
கர்ணன் திரைப்படம், முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் மே 14-ம் தேதி, அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.
இந்த படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
வாள் தூக்கி வருகிறான்… கர்ணன்…#zeetamil #karnan #dhanush #MariSelvaraj @dhanushkraja @mari_selvaraj pic.twitter.com/P0EBbiiHiX
— Zee Tamil (@ZeeTamil) July 18, 2021