பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

தற்போது கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் வைத்து கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்ணன் படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் கர்ணன் படம் பார்த்தேன், திகைத்துப்போனேன். இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் ஆகியோரை நினைத்தால் பெருமையாக உள்ளது. கர்ணன் அனைத்தும் கொடுப்பான் என்று புகழாரம் சூட்டி படத்தை விமர்சித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]