சென்னை
பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி உடல்நலக்குறைவால் மரணம டைந்துள்ளார்
பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி மதுரையை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு ரத்த புற்று நோய் பாதிப்பு ஏர்பட்டது. இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,
இந்நிலையில் நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 7 மணி வரை சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பிறகு அவரது உடல் ந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.