புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தால், இரு வேறுபட்ட இந்தியா உருவாகி உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபில்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “ஒரு இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; தொலைக்காட்சியில் ராமாயணம் பார்க்கிறது; பாட்டுப்போட்டி நடத்துகிறது.
மற்றொரு இந்தியாவோ வீட்டுக்கு செல்ல முயற்சிக்கிறது. அந்த இந்தியா, உணவு, தங்குமிடமின்றி, ஆதரவின்றி, வாழ்வுக்காக போராடுகிறது” என்று ஒரு கும்பலை தாக்கும் வகையில் சுரீரெனப் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி யோகா செய்ததையும், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் தொலைக்காட்சியில் இராமாயணம் பார்த்ததையும், ஸ்மிருதி இரானி டுவிட்டரில் பாட்டுப்போட்டி நடத்தியதையும் கபில் சிபில் குறிப்பிட்டுள்ளார்.