டெல்லி:

மீபத்தில் தலைநகர் வடக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரம் வன்முறைக்கு காரணமாக கூறப்படும் பாஜக தலைவர்களில் ஒருவரான கபில்மிஸ்ராவுக்கு மத்தியஅரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கபில் மிஸ்ராவுக்கு கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் நிலையில் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுவேட்டையாடி கபில் மிஸ்ரா, வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,  சமீபத்தில் வடக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்துக்கு கபில்மிஸ்ரா உள்பட பல பாஜக தலைவர்கள் பேசிய வன்முறை பேச்சு என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர்,  பாஜக தலைவர்கள் அனுராக் தாகூர், பர்வேஸ் வர்மா, கபில் மிஸ்ரா மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர்கள் மீது வழக்கு பதியாத நிலையில் இரவோடு இரவாக முரளிதர் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், டெல்லி கலவரத்துக்கு காரணமாக கூறப்படும் கபில் மிஸ்ராவுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் பரவியது. இது தொடர்பாக அவர் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி மத்திய அரசிடம் மனு கொடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கபில்மிஸ்ராவுக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.  இந்தப் பாதுகாப்பில் 1 அல்லது 2 பேர் தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள், உள்பட 11 பாதுகாவலர்கள் இருப்பார்கள்.  தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளில் ஒய்பிளஸ் நான்காவது கட்ட பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைச் சேர்ந்த கபில் மிஸ்ரா முதலில் ர் யூத் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்.  பின்னர் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார். 2015 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம் கொடுத்தார்.

கபில் மிஸ்ராவின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால், அடுத்த 2 ஆண்டில் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சட்டத்திற்கு புறம்பாக சுகாதாரத்துறை அமைச்சர்  சையேந்திரா ரூ. 2 கோடி பணம் கொடுத்தார் என்று குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து கடந்த   2019ல் பாஜகவில் இணைந்தார் கபில் மிஸ்ரா. பாஜக சார்பில் மாடல் டவுனில் போட்டியிட்டவர்  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,விடம்  தோல்வி அடைந்தார்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கபில் மிஸ்ரா, கடநத மாதம் (பிப்ரவரி)  8ஆம் தேதி டெல்லி சாலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி ஏற்படும் என்றும், அங்கு நடைபெற்று வரும்  ஷாகீன் பாக் பகுதியில் ஏற்கனவே பாகிஸ்தானியர்கள் ஊடுருவி விட்டனர். டெல்லியில் சிறிய அளவிலான பாகிஸ்தான் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது” என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.