சண்டிகர்
அரியானா மாநிலத்தில் உள்ள ராய் விளையாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முதல் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்
அரியானா மாநில சட்டப்பேரவை மழைக்காலத் தொடரில் கடந்த மாதம் விளையாட்டுக்காக தனிப் பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானம் செய்யப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் அரியானா மாநிலத்தில் உள்ள சோனாபேட் பகுதியில் ராய் விளையாட்டுப் பல்கலைக் கழகம் என்னும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தின் முதல் விளையாட்டுப் பல்கலைக் கழகமான ராய் விளையாட்டுப் பலகலைக் கழகத்துக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கபில் தேவ் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அரியான இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைசர் அனில விஜ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1983 ஆம் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் மற்றும் உள்ள ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.