லக்னோ:

உ.பி. மாநிலத்தில் சிவ பக்தர்களால் ஆண்டு தோறும் கன்வர் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. கங்கோத்ரியில் தொடங்கும் இந்த யாத்திரையில் பக்தர்கள் சிறிய பானைகளில் புனித கங்கை நீரை சுமந்து கொண்டு நீல்கந்த் செல்வார்கள்.

இந்த யாத்திரை இன்று தொடங்கியது. யாத்திரையின் போது பக்தர்கள் எதை செய்யக்கூடாது, எதை செய்ய வேண்டும் என்பது குறித்த நிபந்தனைகள் அடங்கிய ஒரு அறிக்கையை மாநில உள்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘யாத்திரை செல்லும் வழிகளில் ரெக்கார்டு பாடகர்களுக்கு தடை வதிக்கப்பட்டுள்ளது. அமைதியாகவும், இதர மதத்தினரை புண்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘ யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள் கொச்சையான திரைப்பட பாடல்களை பாடக்ககூடாது’’ என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்த அறிக்கையை உள்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘யாத்திரைக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை மற்றும் தடை உத்தரவுகள் அனைத்து மாவட்டங்களும் பொருந்தும். இத தொடர்பாக அனைத்து ரெக்கார்டு பாடகர் குழு உரிமையாளர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சில சிறப்பு விஷயங்களில் சம்மந்தப்பட்ட கலெக்டர்கள் அனுமதி வழங்க பரிசீலனை செய்வார்கள்.

மேலும், ஒலி பெருக்கிகள் அல்லது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுவது போன்றவை உரிய அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. அனைத்து பக்தர்களும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். யாருடனும் தவறான முறையில் நடக்க கூடாது. மற்றவர்களை தூண்டிவிடும் சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதிகாக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘யாத்திரையின் போது மது அருந்துதல், புகைபிடித்தல் கூடாது. குடும்பத்தினர், நண்பர்கள் போன் நம்பர்களை பையில் வைத்திருக்க வேண்டும். தேவையான மருந்து பொருட்கள¬யும் உடன் வைத்திருக்க வேண்டும்.

யாத்திரிகர்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அவசர தேவைகளின் போது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிட வேண்டும். பாட்டு பாடுதல் மூலம் இதர மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.