பனாஜி:
கோவா மாநிலத்தில் வசிக்கும் கன்னடர்கள் மீது, அம்மாநில பூர்வகுடி இன வாத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மத்திய கோவாவில் உள்ள போண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இரு மாநிலங்களுக்கும் இடையே மகதாயி நதிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.
கோவா மாநிலத்தில் கன்னடர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து காலி செய்யக்கோரி கோவாவை பூர்வீக மாகக் கொண்ட இனக்குழுவினர் இரும்பு ராடுகள், உருட்டுக் கட்டைகளுடன் சென்று தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதுவரை ஐந்து வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
கலவரக்காரர்களை கோவா மாநில போலீஸ் அடக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது