கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
பழம்பெரும் நடிகர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனான புனீத் ராஜ்குமார் பெங்களூரில் உள்ள வசந்த் நகர் பகுதியில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள், மருத்துவமனையில் குவிந்ததால், அவரது வீடு மற்றும் மருத்துவமனை அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.