கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 46

பா. தேவிமயில் குமார்

கரை சேரும் ஓடங்கள்

அலைகளை தள்ளியே
இலக்குகளை அடைய முடியும்!!

எல்லா நாளும்
கனக்காது நமக்கான
பணப்பை!!

வலி பொறுத்து தான்
ஒவ்வொரு முறையும்
வழி தேட வேண்டும்

புற்கள் களைந்தால்,
பாதையில்
தெளிவிருக்கும்!!!

வலி நிறைந்த
பயணத்தில்
உளிகளுக்கு நன்றி
சொல்லிடு!!!

சேருமிடம் எதுவோ?
சிந்தித்து செல்!
சர்வமும் உன்னுள் ளே!!!

பா. தேவிமயில் குமார்

[youtube-feed feed=1]