கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 44

பா. தேவிமயில் குமார்

தொலைதூர நிலவு

எட்டி பிடிக்க முடியா
அனைத்துமே
எனக்கு நிலவு தான்!!

வெட்கி தலை குனிய
நாணம் ஓடி ஒளிந்திட..
நிலவெனக்கு துணை!!

காதல் கதைகளை
கற்று தருகிறான்
முழு ஒளி நிலவன்!

அவனும் நானும்
அன்றாடம் காதலிப்பதுதை கண்டு….
வெட்கி மறைகிறான்
வெய்யோன்!!

காரிருளுள்ளே அவனின் கதிர்வீச்சு
எனக்கு மட்டுமென
இறுமாப்பு கொண்டேன்!!!

இருள் கோதிய அமுத ஒளி…
இனி எனக்கு மட்டுமே விண்ணப்பிக்கிறேன்!!

காணும்
அத்தனை பெண்களையும்
காதலிப்பதாக கூறுகிறான்…. நிலவன்…..

நீ சந்திரி அல்ல…
சந்திரன் என்பதை
எங்கள் இலக்கியத்தில்
எழுத மறந்து விட்டோம்!

தொலைதூரத்தில் இருந்தாலும்
அவன். ..(ஆண்)அவனாகத்தான் இருக்கிறான்🙂

(நிலவை ஆணாக நினைத்து எழுதியது…..
ஏன்?? நிலவு பெண் என்று யார் சொன்னார்கள்? 😃😃😃😃)

பா. தேவிமயில் குமார்

[youtube-feed feed=1]