கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 43
பா. தேவிமயில் குமார்

காத்திருப்பு…
காத்திருக்கும் விடைகள்
கண்டு கொள்ளா
வினாக்கள்….
ஏக்கம் நிறைந்த
ராவுகள்
தூக்கம் வராத
துளி துயில்கள்!!
காதலுக்கு வரியாக
கண்ணீர்
கவிதைக்கு வரியாக
நீ மட்டுமே!
இரக்கமற்ற பார்வை
எதற்கு?
இதயமற்ற காதல்
ஏனடி?
விரும்பவில்லை என
எப்போதும்
விளம்பிடாதே….
ஏனெனில்
உயிர் வாழ வேண்டுமடி நான்
பா. தேவிமயில் குமார்
[youtube-feed feed=1]