கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 30

பா. தேவிமயில் குமார்

மழையும், குடையும்

*கூடையைத் தலையில்
கவிழ்த்து செல்லும்
கூலி தொழிலாளிக்கு
கூடையே…..குடை!

*ஏழைகளும்
அணிந்திடும்
ஒரே கிரீடம் குடையே!

*கந்தலான கருப்பு
குடை…..
அப்படியொன்றும்
அந்த எளியவனை
முழுதாய் நனை க்கவில்லை!

*என்னை நனைக்க
வந்து,
ஏமாற்றத்துடன்
அழுது கொண்டே
விழுகிறது
குடை மீது! மழை

*குடை பிடிக்கும்
கடவுள், ஊர்வலத்தில்
எப்போதையும் விட
அழகாகவே தெரிகிறார்!

*அதிக நேரம்
குடை பிடிக்க வேண்டாம்!
குடைக்கும் குளிருமல்லவா?

*நாய்க்குடை காளான்
என படிக்கையில்
ஏனோ, நாயே
காளானுக்குக்
குடை பிடிப்பதை போல….
கற்பனை!