கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 17
பா. தேவிமயில் குமார்

கடிதம்
கண்ணால் பேசிய பின்
கடித்ததில்
பேசியதுதான்
காதலின் பரிணாம வளர்ச்சி
அப்போதைய
அஞ்சலட்டைகள்
காதலர்களின்
கொஞ்சலட்டைகளாக
இருந்தது
காதலின் அன்னை
கடிதம்
அவளை முதியோர்
இல்லத்தில்
சேர்த்து விட்டோம்
கடிதமும், மொழியும்
காதலர்கள்
சிறை செய்து விட்டோம்
“இன் பாக்ஸ்” இல்
உலகின் மிகப்பெரிய
உளவாளி
கடிதம் !
நம்மை நினைவால்
சுமந்த சிகப்பியை
பட்டினி போட்டு விட்டோம்…….
“தபால் பெட்டி”
அஞ்சலகத்தை
கடந்து செல்லும்
ஒவ்வொரு நாளும்
காணாமல் போன
கடிதத்திற்கு
கண்ணீர் அஞ்சலி செய்கிறேன்!
Patrikai.com official YouTube Channel