டெல்லி

நாடாளுமன்றத்தில் திமுக எம் பி கனிமொழி பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு எப்போது என வினா எழுப்பி உள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் திமுக எம் பி கனிமொழி,

”சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?.

இந்த எம்.ஆர்.டி.எஸ். நெட்வொர்க்கை மெட்ரோ ரயில்க்கு முழுமையாக மாற்றுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன?

இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரெயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?. ”

என வினா எழுப்பியுள்ளார்.