லக்னோ
பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் ஆறாம் சோதனையில் கொரோனா உறுதி ஆகாததால் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சென்ற மாதம் வெளிநாட்டில் இருந்து பாலிவுட் பாடகி கனிகா கபூர் திரும்பி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்த போது கொரோனா அறிகுறி தென்படவில்லை என தெரிய வந்துள்ளது. அவர் அதனால் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார்.
லக்னோவில் அவர் மூன்று பெரிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அங்கு அவருடன் ராஜ்ஸ்தான் எம்பி துஷ்யந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அதன்பிறகு எம் பி நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டார். அத்துடன் கனிகா கபூர் குடியரசுத் தலைவர் அளித்த விருந்தில் பலருடன் கலந்துக் கொண்டார். அதன் பிறகு கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உள்ளதாகக் கூறப்பட்டது..
கனிகா கபூர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இங்கும் அவருக்கு நான்கு முறை சோதனைகள் நடந்தன. அந்த நான்கு முறையும் கொரோனா உள்ளது உறுதி செய்யபப்ட்டடது. அதன் பிறகு மீண்டும் 5 மற்றும் ஆறாம் முறை கனிகா கபூருக்கு சோதனை நடந்தது.
ஐந்தாம் மற்றும் ஆறாம் முறை நடந்த சோதனையில் கொரோனா தொற்று இல்லை அதாவது நெகட்டிவ் என ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் கனிகா கபூர் மருத்துவமனையில் இருந்து விடுவ்க்கபட்டு வீடு திரும்பி உள்ளார்.
[youtube-feed feed=1]