பிரபல படத்தொகுப்பாளர் நிஷத் யூசுப் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இன்று அதிகாலை 2 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

2022ம் ஆண்டு சிறந்த எடிட்டருக்கான கேரள மாநில அரசு விருது பெற்ற நிஷத் யூசுப் பல்வேறு படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியாக உள்ள பசூக்கா ஆகிய படங்களுக்கு இவர் தற்போது படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.