மும்பை: நடிகை கங்கனா ரனாவத் அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கு செப்டம்பர் 22 வரை மும்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு பிறகு நடிகை கங்கனா ரனாவத் கூறி வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையாகி வருகின்றன. மும்பை மாநகரன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீராகி விட்டது என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக, ஆளும் சிவசேனா அரசு கங்கனா மீது கடும் கோபம் கொண்டது. அதன் தொடர்ச்சியாக கங்கனாவின் வீட்டு வளாகத்தில் சட்ட விரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் மும்பை உயர் நீதிமன்ற தலையீட்டால் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில் கங்கனா அலுவலக இடிப்பு விவகாரம் தொடர்பான வழக்கை செப்டம்பர் 22 வரை ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.  முன்னதாக கங்கனாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.