சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.
ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் சுஷாந்த் மரணம் தற்கொலைதான் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு நடிகை கங்கணா மறுப்பு தெரிவித்துள்ளார்.
1) சுஷாந்த் தொடர்ந்து பெரிய திரைப்பட நிறுவனங்கள் தன்னை புறக்கணிப்பதாக கூறிவந்தார். அவருக்கு எதிராக சதி செய்த அந்த நபர்கள் யார்?
2) அவர் ஒரு பாலியல் குற்றவாளி என்று ஊடகங்கள் ஏன் தவறான செய்தியை பரப்பியது?
3) மகேஷ் பட் ஏன் மனநல பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தார்? என கங்கனா கேர்ள்வி எழுப்பியுள்ளார் .

[youtube-feed feed=1]