ஐசிசி டெஸ்ட் தரவரிசை – முதலிடம் பிடித்தார் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்!

Must read

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், விராத் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐசிசி. இதில், நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்மித், மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் பெற்றுள்ள புள்ளிகள் 877.

அதேசமயம், இரண்டாமிடத்தில் ஏற்கனவே இருந்த விராத் கோலி, அதில் எந்த மாற்றமுமின்றி அதேயிடத்தில் நீடிக்கிறார். அவர் பெற்ற புள்ளிகள் 879.

அதேசமயம், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், மொத்தம் 890 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “விராத் கோலி, ஸ்டீவ் ஸ்மித் இருவருமே சிறந்த வீரர்கள். இவர்களுக்கு எதிராக விளையாடுவதை நான் எனக்கான நல்வாய்ப்பாக பார்க்கிறேன்” என்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ரஹானே, 784 புள்ளிகள் பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

Latest article