பெங்களூரு:
கர்நாடகா முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார். அதைத்தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
காவிரி பிரச்சினை குறித்து பேசுவதற்காக கர்நாடக முதல்வரை சந்திக்க செல்வதாக கூறி நேற்று பிற்பகல் நடிகர் கமல்ஹாசன் பெங்களூரு பயணமானார்.
சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் அவரிடம் ரஜினியின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசப் போகிறீர்களே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கமல், இப்போது நான் திரைப்படங்களைப் பற்றி இப்போது பேசுவதற்காக செல்லவில்லை என்றும், காவிரி பிரச்சினை குறித்து பேசவே செல்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். இருவரும் காவிரி விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.