‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் .

‘விக்ரம்’ திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. கமல் ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் ‘டெஸ்ட் ஷூட்’ சென்னையில் நடந்துள்ளது.

விக்ரம் படத்துக்கான டெஸ்ட் ஷூட் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் #VikramFirstLook என்ற ஹேஸ்டேகில் கொண்டாடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]