சென்னை

டந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து நடிகர் கமலஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் 5 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.  அப்போது அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கட்சிக் கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இந்த விழாவில் கமல் உரையாற்றி உள்ளார்.

அவர் தனது உரையில் “வணிகம் செய்ய நாம் இங்கு வரவில்லை.  மாறாகத் தமிழகத்தை சீரமைக்க வந்திருக்கிறோம்.  ஏற்கவே அதிமுகவிலும், திமுகவிலும் சஞ்சலப்பட்டு போன நல்லவர்கள் இங்கே வாருங்கள். இங்கு வந்து உங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியைத் தொடங்குங்கள்’’ எனப் பேசினார்.

பிறகு  அவர் செய்தியாளர்களிடம், “இந்த தேர்தலில் நேர்மைக்கு இடம் இல்லாமல் எல்லா இடத்திலும் பணம் கொடுத்திருக்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதால்தான் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த தேர்தலில் அராஜகம் தலைவிரித்தாடியதற்கான சான்றுகள் கண்கூடாக இருக்கின்றன’’ எனத் தெரிவித்துள்ளார்.