சென்னை

ன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கடுமையக விமர்சித்துள்ளார்.

 

இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கான எவ்வித நலத்திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறி உள்ளனர்.

பொதுவாக இந்த நிதிநிலை அறிக்கையை பாஜகவினர் தவிர மற்ற அனைவரும் குறை கூறி உள்ளனர்.  பல நிதித்துறை நிபுணர்கள் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து கடும் விமர்சனம் எழுப்பி உள்ளனர்.  எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன்,

”மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது” 

என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.