அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கு துணையாக மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தேர்ந்தெடுத்துள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மட்டுமே போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்ததை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 4000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அவரை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் சிகாகோவில் நடைபெறும் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தன்னுடன் துணை அதிபராக இருக்க தகுதி வாய்ந்தவராக மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை தேர்வு செய்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நெப்ராஸ்காவின் வெஸ்ட் பாயிண்ட்டைச் சேர்ந்த டிம் வால்ஸ், மினசோட்டாவின் மன்காடோவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் கால்பந்து பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

60 வயதாகும் வால்ஸ் 24 ஆண்டுகள் தேசிய இராணுவ காவல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ், அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் முதல் கறுப்பின பெண் மற்றும் முதல் தெற்காசிய பெண் கமலா ஹாரிஸ்.

நவம்பர் மாதம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை தோற்கடித்தால், அவர் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து துணை அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரம்…