சென்னை
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று அப்துல் கலாம் விட்டில் இருந்து தனது அரசியல் பயணம் தொடங்கும் என கமலஹாசன் அறிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் டிவிட்டரில் அரசியல் பற்றிய கருத்துக்கள் கூறிக் கொண்டிருந்தார். தற்போது அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஏற்கனவே ரஜினிகாந்தும் அரசியலில் இறங்கப் போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கட்சி துவங்கும் தேதி பற்றி ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. கமல் தனது கட்சியின் விவரங்களை வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அறிவிக்கப் போவதாக கூறி இருந்தார்.
தற்போது கமல், “வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று எனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தொடங்கப் போகிறேன். தமிழ்நாடு தழுவியது மடுமே திராவிடம் இல்லை. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும் தொல் பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் சம்பத்தப் படுத்தப் பட்டுள்ளது. பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு, சித்தராமையா, சந்திரசேகர ராவ் ஆகியோரும் திராவிடர்களே” என தெரிவித்துள்ளார்.