சென்னை:
நடிகர் கமல் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான ஆயத்தை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் கட்சியின் பெயர் அறிவிக்காத நிலையிலும் இதர பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த வகையில் அவர் விரைவில் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். முன்னதாக கேரளா முதல்வர் பினராய் விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை கமல் சந்தித்து பேசினார். இந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
மாநாட்டிற்கு முன்னதாக இந்த சந்திப்பு இருக்கும் என்று தெரிகிறது. இதற்கான தேதியை முடிவு செய்து கொடுக்குமாறு அவர் கோபாலபுரத்துக்கு தூது அனுப்பியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.